சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று. ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி வருகிறார்கள். இதுவரை அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய் வரை ஏலத்தில் விற்பனையான நிலையில் 26.75 கோடி ரூபாய்க்கு ஸ்ரேயர்ஸ் ஐயரை ஏலத்தில் வாங்கியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 23.75 கோடிக்கு கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரை தக்க வைத்தது.

இந்நிலையில் இந்திய வீரர் ஹர்ஷல் படேலை தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த அணி முதலில் 6.75 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் இறுதியாக எடுத்த நிலையில் பஞ்சாப் அணி ‌RTM கார்டை பயன்படுத்தியது. பஞ்சாப் அணி ஏலத்தொகையை 8 கோடி ரூபாயாக உயர்த்திய நிலையில் அந்தத் தொகையை இறுதியில் ஹைதராபாத் அணி கொடுத்து ஹர்ஷல் படேலை பெற்றுக்கொண்டது.