
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்று கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முன்னதாக வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயத்த 249 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழந்து 251 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும் அக்சர் படேல் 52 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார்கள்.
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆட்டத்தில் வெறும் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார் இருப்பினும் இந்த போட்டிக்கான ஆடும் அணியில் தான் முதலில் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் ஸ்ரேயாஸ். மேலும் விராட் கோலி காயமடைந்ததால் தான் தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறியிருந்தார். ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை பிளேயிங் லெவனில்-ஐ சேர்க்கஅணி நிர்வாகமானது முதலில் திட்டமிட்டுள்ளது. இது பல முன்னாள் வீரர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . ஏனெனில் கடந்த ஒரு நாள் உலகக் கோப்பையில் நான்காவது இடத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார்.
அதன் மூலமாக ஒரு உலக கோப்பையில் நான்காவது இடத்தில் களம் இறங்கி 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். அப்படிப்பட்ட அவரை அணியிலிருந்து கழற்றிவிட பார்க்கலாமா? என்ற விமர்சனமும் இருந்தது .இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய தலைமை இந்திய அணியின் தலைமை பயிற்சிளர் கம்பீர் இதுகுறித்து கூறுகையில்,” ஸ்ரேயாஸ் ஐயர் தொடர் முழுவதும் பெஞ்சில் அமர்ந்திருக்க மாட்டார். முதல் போட்டியில் நாங்கள் ஜெயிஸ்வாலை சோதித்து பார்க்க விரும்பினோம்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நல்ல form-இல் இருந்த அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க விரும்பினோம். ஸ்ரேயாஸ் எங்களுடைய முக்கியமான வீரர் என்பது எங்களுக்கு தெரியும். சில நேரங்களில் மூன்று போட்டிகள் மட்டுமே கிடைக்கும் பொழுது உங்களுடைய அணியில் இருக்கும் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதைத்தான் செய்தோம். மற்றபடி ஸ்ரேயாஸ் எங்களுடைய திட்டங்களில் ஒரு அங்கமாக இருப்பதால் தான் மூன்று போட்டிகளில் விளையாடினார் ” என்று கூறியுள்ளார்.