துலுக்க நாச்சியார் எதற்கு ரங்கநாதன் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள்? என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்வியெழுப்பியுள்ளார் செல்வப்பெருந்தகை.

காலம் காலமாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் அங்கே தான் வாழ்கிறார்கள் அவர்களுடைய வரலாறு தெரியுமா? பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கேளுங்கள். திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இருக்கிற துலுக்க நாச்சியாரின் சிலையை அவர்கள் எடுத்து விடுவார்களா? தைரியம் இருக்கிறதா?  அவர்களுக்கு துலுக்க நாச்சியாரை யார் எடுத்து வைத்தது. அங்கே துலுக்க நாச்சியாரை இஸ்லாமிய அமைப்பினரா ஸ்ரீரங்கம் கோவிலில் கொண்டு போய் வைத்தார்கள். இல்ல காங்கிரஸ் போய் எடுத்து வைத்ததா? அரசியல் கட்சி எடுத்து வைத்ததா? துலுக்க நாச்சியார் வரலாறு தெரியுமா

வரலாறே தெரியாது எதுவுமே தெரியாது. போராட மட்டும் தான் தெரியும். துலுக்க நாச்சியாருக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஏன் துலுக்க  நாச்சியாரை எல்லா இந்துக்களும் பார்த்துவிட்டு வருகிறார்கள். துலுக்க நாச்சியார் எதற்கு ரங்கநாதன் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள்?  இவ்வளவு போர் பிடித்து இருக்கிறீர்களே இந்த விஷயத்திற்கு ஏன் தூக்கவில்லை. காரணம் வரலாறு தெரியவில்லை. திருப்பதியில் சென்று பிரதமரெல்லாம் சென்று விழுந்து விழுந்து கும்பிடுகிறாரே. அங்கு துலுக்கநாச்சியார் இல்லையா? அப்போ இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன பிண்ணிப்பிணைந்த அந்த காலத்து உறவு இருக்கிறது என்பது தெரியாதா ? அவர்களுக்கு” என்று பேசியுள்ளார்