
திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அங்கே ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பெரிய பையுடன் வேகமாக நடந்து சென்றார். இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து ஆய்வு செய்தனர் . அப்போது அவர் பையில் தங்க நகை மற்றும் பணம் போன்றவைகள் இருந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுக்கோட்டையை சேர்ந்த சரவணன்(25) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் ரூ.15 லட்சம் ரொக்கமும், 2.45 கிலோ எடையுள்ள ரூ. 1 கோடியே 89 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.