
நான் கேட்கும் கேள்விக்கு பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியாது என பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இது குறித்து பதில் அளித்த அண்ணாமலை, ராகுல் காந்தி முதலில் யார் ?காங்கிரஸ் கட்சியின் தலைவரா ? அவர் காங்கிரஸ் கட்சியினுடைய ஒரு எம்பி. பிறகு ஏன் அவர் விவாதத்திற்கு வர வேண்டும். அவர் இந்திய கூட்டணியின் பிரதம வேட்பாளரா ? இல்லை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி பிரதம வேட்பாளர் என யாராவது கூறியது உண்டா? ராகுல் காந்தி காங்கிரஸில் ஒரு சாதாரண தனிமனிதன். பாரதிய ஜனதா கட்சியில் நானும் ஒரு சாதாரண தனி மனிதன். அதை தாண்டி ராகுல் காந்தி அவர்களுக்கு சிறப்பு தன்மையாக என்ன இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் விவாதத்திற்கு வருகிறேன் எனக் கூறினால் நம் ஊரில் இருக்கும் வடிவேல் காமெடி போல் உள்ளது.
நான் பண்போடு மரியாதையுடன் கேட்கிறேன் யார் ராகுல் காந்தி ? மோடி ஜி அவர் தற்போதைய பிரதமர். தேர்தலிலும் அவர் பிரதமர் வேட்பாளர் அவருடன் விவாதிக்க வேண்டும் என்றால் இன்னொரு பிரதமர் வேட்பாளர் விவாதிப்பது தான் சரியாக இருக்கும். சிந்தித்து பேச வேண்டும். தற்போது இவரது இந்த விவாதத்திற்கு தயாராக வேண்டுமானால், நாளை அரவிந்த் கெஜ்ரிவால் கேட்பார். அடுத்தபடியாக மம்தா பானர்ஜி அவர்கள் கேட்பார். இவர்களெல்லாம் கேட்கும் போது எங்கள் ஸ்டாலின் அண்ணன் சும்மா இருப்பாரா ? அவரும் நானும் பிரதமருடன் விவாதிக்க வேண்டும் என கேட்பார். ஆகையால் எல்லாரும் விவாதிக்க தயாரானால் இது பிரச்சினையாக உருவெடுக்குமே தவிர இதற்கு தீர்வு ஆகாது. பிரதமருடன் விவாதிக்க இன்னொரு பிரதமர் வேட்பாளர் தான் சரியான ஆளாக இருக்க முடியும் என்ன தெரிவித்துள்ளார்.