வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறிய நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  நாட்டை விட்டு வெளியேறினார். அவர் ராஜினாமா செய்த பிறகும் தொடர்ந்து அங்கு மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, வங்காளதேசத்தில் ஜனநாயகம் மீண்டும் தழைக்கு போது நிச்சயம் என்னுடைய தாயார் நாடு திரும்பவுவார். ஆனால் அவர் அரசியல்வாதியாக ஓய்வு பெற்றுவிட்டாரா அல்லது மீண்டும் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

முன்பு என்னுடைய தாயார் நாடு திரும்ப மாட்டார் என்று நான் தான் கூறினேன். ஆனால் தற்போது நாடு முழுவதும் எங்களுடைய கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் தற்போது முடிவை மாற்றியுள்ளோம். எங்களால் அவாமி லீக்  கட்சியை கைவிட முடியாது. ஏனெனில் இது ஒரு பழமையான கட்சி. ஆகவே கட்சிக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நிச்சயம் என் தாய் மீண்டும் வருவார். ஒரு புதிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அதற்கு அவாமி லீக் கட்சி வேண்டும். எனவே இந்த கட்சியும் எங்கள் குடும்பமும் தொடர்ந்து வங்கதேச அரசியலில் இருக்கும். முகமது யூனிஸின் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவர் ஒற்றுமையை ஏற்படுத்த விரும்புவார். மேலும் அவருடைய அரசு விரைவில் அமைதியை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.