விஜய் டிவியில் அண்டா கா கசம் என்ற கேம் ஷோ ஒன்று வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. அடுத்த வாரம் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சிக்கான சூட்டின் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான தினேஷ், விஷ்ணு, விசித்ரா, அக்ஷயா, அனன்யா மற்றும் ரவீனா ஆகியோரை வைத்து சூட்டிங் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

அப்போது விசித்ரா, தினேஷ் தன்னுடைய டீமுக்கு வரவேண்டும் என பிரச்சனையை கிளப்பியுள்ளனர். இதற்கு தினேஷ் மறுப்பு தெரிவித்த நிலையில் விசித்ரா ஷூட்டிங்கில் இருந்து பாதையில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ரவீனாவின் உறவினரை வைத்து சூட்டிங் நடைபெற்றதாக கூறப்படுகிறது