ஐபிஎல் 2024 கோப்பையை பழைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கேகேஆர் அணி வென்றது. சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அதிகம் பார்க்கப்படும் மற்றும் கேட்கப்படும் செய்திகளில் ஒன்றாக உள்ளது. அதேபோல் கே கே ஆர் அணி வெற்றி பெற்றதை  அடுத்து அதை கொண்டாடும் வீடியோக்கள் பல சமூக வலைதளத்தில் வைரலானது.

கே கே ஆர் அணியின் கேப்டன் சுரேஷ் ஐயர் வெற்றி பெற்ற பின்பு மேடையில் நடனமாடிக்கொண்டே கோப்பையை நடுவில் எடுத்துச் சென்று பின் கோப்பையை தூக்கி ஆடுவது போன்ற காணொளியை பார்த்து  பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி அவர்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற போது இதே போன்று கொண்டாடியதாகவும் அதேபோன்று இவர் செய்ததாகவும் வீடியோக்களை ஒப்பிட்டு ரசிகர்கள் இதுகுறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

அதே போல் சென்னை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவில் ரசிகர்கள் சிஎஸ்கே என முழக்கமிட்டனர். அதை கவனித்த ஷாருக்கான் எனக்கும் சிஎஸ்கே மிகவும் பிடிக்கும் என அவரும் ரசிகர்களோடு சிஎஸ்கே, சிஎஸ்கே, சிஎஸ்கே என கூச்சலிட்டார். இந்நிலையில் மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் கே கே ஆர் அணியின் முக்கிய வீரர்களின் ஒருவரான ரிங்கோசிங் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் அவர்களை கட்டியணைத்து பேசினார்.

அப்போது ஷாருக்கான் இது கடவுளின் திட்டம் என கூற ஆவி கடவுளின் திட்டம் எனக் கூறியதுடன் இறுதியாக சந்தோஷத்தின் உச்சியில் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் முன்பே எஃப் என்னும் கெட்ட வார்த்தையை பேசியுள்ளார். இதை ஷாருக்கான் முன்பு பேசுவதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும் என நெட்டிசன்கள் அந்த வீடியோவிற்கு கீழ் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Cricket fan (@abcrickinfo_16)