உலகம் முழுவதும் பல பயனர்களால் ஸ்கைப் பயன்படுத்தப்படுகிறது. இது உரையாடல்களை இயக்கும் ஒரு மென்பொருளாகும். கடந்த 2003 ஆம் ஆண்டு வாய்ஸ் கால் செயலியாக ஸ்கைப் அறிமுகமான நிலையில் அதனை கடந்த 2011 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது. பின்னர் அது வீடியோ கால் செயலியாக மாற்றப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது வருகிற மே மாதம் 5-ம் தேதி முதல் ஸ்கைப் சேவையை நிறுத்த மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வாட்ஸ் அப் வீடியோ கால் மற்றும் Zoom போன்றவைகளை ஏராளமானோர் பயன்படுத்துவதால் ஸ்கைப் பயன்பாடு என்பது குறைந்துவிட்டது. இதன் காரணமாக ஸ்கைப் சேவையை மைக்ரோசாப்ட் நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை மேம்படுத்த உள்ளது. மேலும் ஸ்கைப் பயனர்கள் தங்களுடைய கணக்கை டீம்ஸ் செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.