சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு 440 வரையில் சரிவடைந்தது. ஆனால் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 58,360 ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 7295 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 7750 ரூபாய்க்கும், ஒரு சவரன் 62 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 3 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 107 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது. மேலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.