
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு தற்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரேஷன் கார்டுகள் மூலமாக அத்யாவசியமான பொருள்கள் மட்டுமின்றி அரசின் பல நலத்திட்ட உதவிகளும் மக்களை சென்றடைகிறது. தற்போது ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிதாக விண்ணப்பித்தோருக்கு ஸ்மார்ட் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ரேஷன் கார்டில் முன்னதாக பெயர் நீக்க வேண்டுமென்றால் ஆன்லைன் சென்டருக்கு சென்று சுலபமாக வேலையை முடித்துக் கொள்ளலாம்.
ஆனால் தற்போது ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்க புதிய நடைமுறை வந்துள்ளது. அதாவது இதுவரை இறந்தவர்கள் மற்றும் புதிதாக திருமணமானவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் அதற்குரிய சான்றுகளை விண்ணப்பித்து நீக்கிக் கொள்ளலாம். ஆனால் தற்போது அதில் பலமுறை கேடுகள் நடப்பது தெரிய வந்துள்ளதால் இனி அதிகாரிகள் வீட்டிற்கு நேரடியாக வந்து ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கல் உள்ளிட்ட பணிகளை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அவர்களிடம் நேரடியாக பெயர் நீக்குவதற்கு உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அதனை சரிபார்த்த பிறகு அனைத்தும் கரெக்டாக இருந்தால் மட்டும் தான் பெயர் நீக்கப்படும். மேலும் இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.