மின் கட்டண உயர்வால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையி மின் கட்டணம் திரும்பப் பெறுவதற்கு வலியுறுத்தி ஜூலை 25-ல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம்-யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜூலை 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்”  என்று குறிப்பிட்டுள்ளார்.