
இந்தியாவில் மக்கள் பலரும் தங்கள் வருங்கால சேமிப்பிற்கு இப்போதிலிருந்தே முதலீடு செய்ய விரும்புகின்றனர். குறிப்பாக வங்கிகளில் பிக்சர் டெபாசிட் திட்டத்தில் மக்கள் அதிக அளவு முதலீடு செய்கிறார்கள். அதன்படி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அதிக வட்டி தரும் வங்கிகள் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி மூன்று ஆண்டு வைப்புத் தொகைக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் வழங்குகின்றது.
அதே சமயம் HDFC, ICICI, SBI ஆகிய வங்கிகள் 3 ஆண்டு வைப்பு தொகைக்கு குடிமக்களுக்கு 7% மூத்த குடிமக்களுக்கு 7.5% வழங்குகிறது. பேங்க் ஆப் பரோடா 3 ஆண்டுகளுக்கு குடிமக்களுக்கு 6.75% மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. கோடக் மகேந்திரா நிறுவனம் குடிமக்களுக்கு 7%, மூத்த குடிமக்களுக்கு 7.6% வைப்பு தொகையாக வழங்குகிறது.