இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது சிரமமாக உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இதற்காக அரசும் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல் வேலையில்லாத இளைஞர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடுகிறது.

அதனால் இது போன்ற மோசடி கும்பலில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் வேலை தேடுபவர்களுக்கான தகுந்த வேலையை தேடி வழங்கும் தனியார் இணையதளங்கள் ஏராளம் உள்ளன. அதுபோல தமிழக அரசும் தனியாக இணையதளத்தை நடைமுறையில் வைத்துள்ளது. https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளம் நடைமுறையில் உள்ளது. இந்த இணையதள பக்கத்திற்குச் சென்ற உங்க…