
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மாலை 6 மணி அளவில் கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் உரையாற்ற இருக்கிறார் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய துவங்கியுள்ளனர்.
இதில் இளைஞர் ஒருவர் மாநாட்டிற்கு வருவதற்காக வேலையே வேண்டாம் என்று உதறி விட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மாநாட்டிற்கு செல்வதற்காக அவரது அலுவலகத்தில் இளைஞர் விடுப்பு கேட்ட நிலையில் மறுக்கப்பட்டுள்ளது.
விடுப்பு எடுத்தால் பணி நீக்கம் செய்வோம் என்றும் எச்சரித்துள்ளனர். ஆனாலும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வேலை போனாலும் பரவாயில்லை என்று அந்த இளைஞர் மாநாட்டிற்கு வருகை புரிந்ததாக பேட்டி அளித்துள்ளார்.