
கேங்மேன் வேலைகேட்டு போராடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பழிவாங்கத் துடிப்பதா? வழக்குகளை ரத்து செய்து பணி வழங்குங்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், மின்வாரிய கேங்மேன் பணிக்கு தேர்ச்சியாகி, வேலை பெறாத இளைஞர்களின் கோரிக்கை நியாயமானது.
தேர்வு நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தங்களுக்கு வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சிக்கலுக்கு தீர்வு என்பது பணி வழங்குவது தானே தவிர, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்புவதில்லை என கூறியுள்ளார்.