
ஆந்திர மாநிலத்தில் ஏராளமான மலை கிராமங்கள் இருக்கும் நிலையில் அந்த கிராமங்களுக்கு செல்லும் விதமாக சாலை வசதிகள் இல்லை. இதனால் அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மலை கிராம மக்களுக்காக தற்போது அரசு ஒரு சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது குறுகலான சாலைகள் மற்றும் மலைப்பகுதிகளில் எளிதாக செல்லும் வகையில் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இருசக்கர வாகனத்தில் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் இருக்கிறது. இதனால் நோயாளிகளை எளிதாக அதில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம். இதில் படுக்கை வசதியுடன் ஆக்ஸிஜன் வசதிகளும் இருக்கிறது. இந்த புதிய வசதி தற்போது 3 மாவட்டங்களில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது இந்த ஆம்புலன்ஸ் வசதி அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.