சசிகுமார் சிம்ரன் நடிப்பில் ரிலீசான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சசிகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, படம் சூப்பர் என யார் சொன்னாலும் மனம் சொக்கி போகும்.

சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் என்று சொன்னால் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும். அயோத்தி, நந்தன் படம் பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு சூப்பர் சசிகுமார் என அழுத்தி சொன்னார். தர்மதாசாகவே வாழ்ந்திருக்கீங்க. சொல்ல வார்த்தையே இல்லை. அந்த அளவுக்கு வாழ்ந்துட்டீங்க.

பல சீன்களில் கலங்கடிச்சுட்டீங்க. சமீப காலமா உங்களோட கதை தேர்வு வியக்க வைக்குது சசிகுமார் என ரஜினி சார் சொல்ல சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மனதில் நேரத்தை அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் டூரிஸ்ட் பேமிலி பட குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார் என்ன பதிவிட்டுள்ளார்.