
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பவக்கடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவியாக இருந்தவர் ஸ்ருதி (34). இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஆடிட்டராக வேலை பார்க்கும் கோபாலகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ரோஷினி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இதில் கோபாலகிருஷ்ணனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததோடு ரோஷினியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டும் அவருடைய கணவர் அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் மிகவும் மன வேதனை அடைந்த ஸ்ருதி இன்று காலை தன் குழந்தையை கொலை செய்துவிட்டார். பின்னர் ரோஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுருதி எழுதிய தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.