உத்திரபிரதேச மாநிலத்தில் லண்டனில் வேலை பார்த்து வந்த கப்பற்படை அதிகாரி சவுரப் ராஜ்புத் என்பவரை அவருடைய மனைவி முஸ்கான் கள்ளக்காதலன் சாகலுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்து உடம்பை 15 துண்டுகளாக கூறு போட்டு சிமெண்ட் போட்டு பூசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது இதே போன்று மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் தனலால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கும் நிலையில் அவருடைய மனைவி வேறொரு வாலிபருடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இது தனலாலுக்கு தெரிய வந்த நிலையில் அவர் தன் மனைவியை தட்டி கேட்டுள்ளார்.

இதன் காரணமாக அவருடைய மனைவி தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொன்றதோடு பின்னர் உடலை பைக்கில் எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தீ வைத்து எரித்து விட்டனர். அவருடைய சடலம் பாதி எரிந்த நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி அவருடைய சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. தற்போது அவருடைய மனைவி கோபாலி தேவி மற்றும் கள்ளக்காதலன் தீனதயாள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் இதற்கிடையில் கணவனை கொன்று அவருடைய மனைவி கள்ளக்காதலனுடன் பைக்கில் சடலத்தை எடுத்துச் சென்ற சிசிடிவி வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.