
பொதுவாக குழந்தைகள் என்றாலே செல்ல பிராணிகள் மீது அதிக அன்பு காட்டுவார்கள். அதீத பிரியம் அவைகளிடம் காட்டுவார்கள். அவ்வாறு இருக்கும் அவர்களிடமிருந்து செல்ல பிராணிகளை பிரிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது. செல்லப்பிராணி ஆனது இறந்துவிட்டாலும் அல்லது வேறு யாருக்காவது கொடுத்து விட்டாலும் அவர்கள் அழுது விடுவார்கள்.
அந்த வகையில் ஒரு வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சில குழந்தைகள் தாங்கள் வளர்த்து வந்த ஆட்டை கொலை செய்வதற்கு சம்மதிக்காமல் கதறி அழுகிறார்கள். ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களோ தங்களுடைய தேவைக்காக அந்த ஆட்டை குழந்தைகளிடமிருந்து மீட்டு செல்கின்றனர். இந்த வீடியோ காட்சியானது கண்கலங்க வைக்கிறது.
View this post on Instagram