காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி எப்பொழுதுமே வெள்ளை நிற டி ஷர்ட் தான் அணிந்து வருகிறார். இதற்கு காரணம் குறித்து தன்னுடைய பிறந்தநாள் அன்று எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எப்பொழுதும் வெள்ளை நிற டீசர்ட் தான் அணிகிறீர்கள் ஏன் என்று கேள்வி வருகிறது.

ஏனென்றால் வெள்ளை நிறம் வெளிப்படை தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமை உணர்த்துகிறது. உங்கள் வாழ்க்கையில் இந்த வெள்ளை டீ-சர்ட்டுக்கான மதிப்பு எங்கே? எப்படி? பயனுள்ளதாக இருக்கும் என்பதை “ஒயிட் டீசர்ட் ஆர்மி”என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி வீடியோவில் சொல்லுங்கள். நான் உங்களுக்கு ஒரு வெள்ளை டீசட்டை பரிசாக கொடுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.