
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வரி சான்றிதழ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நேற்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவினை பிறப்பித்தது. அதாவது வெளிநாடு செல்லும் அனைவருக்கும் வரி சான்றிதழ் தேவை இல்லை என அரசு அறிவித்துள்ளது.
அதன் பிறகு கடுமையான நிதி முறைகேடுகள், வருமான வரி மற்றும் சொத்து வரி சம்பந்தமான வழக்குகளில் தொடர்புடையவர்கள் வரி நிலுவை 10 லட்சத்திற்கும் மேலிருந்தால் அவர்கள் மட்டும் வரி சான்றிதழ் பெறுவது கட்டாயம். மேலும் மற்றபடி வெளிநாடு செல்லும் அனைவருக்கும் வரிசான்றிதழ் தேவை இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.