மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் பர்வேஸ் அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் தன்னுடைய சம்பள பாக்கியை அன்சாரியிடம் கேட்டுள்ளார். அதன்படி தனக்கு தரவேண்டிய ரூ.1,250-ஐ அவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அன்சாரி ஜூன் 20-ம் தேதி தருவதாக கூறியுள்ளார். இதனால் அன்சாரிக்கும் தொழிலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தொழிலாளி அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அருகில் நின்று கொண்டிருந்த அன்சாரியின் நண்பரையும் அவர் தாக்கினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.