பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா. இங்கிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் பெகுசராய் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் 13 வயது சிறுவனை சிலர் கட்டி வைத்து தண்டவாளத்தில் படுக்க வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுவன் மீது தாக்குதல் நடத்தியது அதே பகுதியைச் சேர்ந்த ககுல் குமார், ஜெயராம் சவுத்ரி மற்றும் ரோஷன் குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் சில பொருட்களை திருடியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த குற்ற சாட்டுகளை சிறுவனின் தந்தை மறுத்துள்ளார். மேலும் தன்மகனை வேண்டுமென்றே அவர்கள் கட்டி வைத்து தாக்கியதாக வேதனையுடன் கூறியுள்ளார்.