கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மக்கள் இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் கோடைகாலத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடன், ஐஸ் வாட்டர் அருந்துவது ஆபத்து என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும்.

இதனால் பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்திய சுகாதாரத்துறை அவ்வாறு வெளியில் சென்று வந்தால் குளிர்பானம், ஐஸ் வாட்டரை உடனே பருகாமல், சற்று நேரம் கழித்து அருந்துவது நல்லது எனக் கூறியுள்ளது.