
தமிழ் திரையுலகில் லிட்டில் ஸ்டார் ஆக இருந்து தற்போது மிகப்பெரிய நடிகராக வளர்ந்திருப்பவர் சிலம்பரசன். சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக அமைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை இரண்டாம் பாகம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில் கௌதம் மேனன் அதற்கான காரணத்தை பகிர்ந்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்து விட்டதாகவும் சிம்பு தான் தற்போது படம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றும் அதன் காரணமாகவே படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.