தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா நடிகர் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்து கொண்டதற்கு முன்னாள் முதல்வரின் மகனும் முன்னாள் அமைச்சருமான கேடி ராமராவ் தான் காரணம் என்று கூறியிருந்தார். இதற்கு நடிகர்கள் நாகார்ஜுனா, நாக சைதன்யா, நடிகை சமந்தா மற்றும் நடிகை அமலா உள்ளிட்ட அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். நடிகை சமந்தா நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்தின்படி விவாகரத்து பெற்றதாகவும் தேவை இல்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் கூறிய நிலையில் நடிகை சமந்தாவிடம் அமைச்சர் கொண்டா சுரேகா மன்னிப்பு கேட்டார்.

இருப்பினும் இந்த விவகாரத்திற்கு தெலுங்கு திரை உலக பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது அமைச்சர் கொண்டா சுரேகா மீது நடிகர் நாகார்ஜுனா தற்போது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் இந்த விவகாரத்தை அவர் சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்.