ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையுக்குப் பழிவாங்கும் நோக்கில் பாகிஸ்தான், ஜம்மு மற்றும் மேற்கு எல்லை பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தன.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், வீரேந்திர சேவாக், ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் ஆகியோர் சமூக வலைதளங்களில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெங்கடேஷ் பிரசாத், “பாகிஸ்தான் ஒரு தீய நாடு, இந்தியா அவர்களுக்கு மோசமான பாடம் கற்பிக்கும்” எனக் கூறியுள்ளார். சேவாக், “பாகிஸ்தான் அமைதியாக இருக்க வாய்ப்பு இருந்தும், போரைத் தேர்ந்தெடுத்துள்ளது” என விமர்சித்துள்ளார்.

ஷிகர் தவான், “நமது எல்லைகளை பாதுகாத்த வீரர்களுக்கு வணக்கம், இந்தியா வலிமையாக நிற்கிறது” என புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹர்பஜன் சிங் “ஜெய் பாரத், ஜெய் ஜவான்” என எழுதியுள்ளார். பாக் தாக்குதல்களால் இந்தியாவில் பெரும் கோபம் வெடித்துள்ள நிலையில், மக்கள் சமூக ஊடகங்களில் இந்திய ராணுவத்தை பாராட்டி வருகின்றனர்.