மும்பை டாஹிசர் மேற்கில் உள்ள கண்பத் படில் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையான மோதலில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக சிறிய சச்சரவுகள் காரணமாக மனவெறுப்பில் இருந்த ஷேக் மற்றும் குப்தா குடும்பங்கள்,கடந்த  நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் ஹமீத் ஷேக், ராம் குப்தா மற்றும் அரவிந்த் குப்தா ஆகிய 3 பேர்  உயிரிழந்தனர்.

இதே மோதலில் மூவர் படுகாயமடைந்து, சடாப்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி  மருத்துவர்கள் தெரிவித்ததாவது, காயமடைந்தவர்களின் உடல்நிலை தற்போது  முன்னேறியுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கண்பத் படில் நகர் பகுதியில் பெரும் பதற்றமும் துயரமும் நிலவுகிறது.

 

மேலும் இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.