புதுச்சேரியில் தனியார் வங்கியில் கடன் வாங்கியவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு வங்கி அதிகாரிகளின் மிரட்டல் தான் காரணம் என இறந்தவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அவரின் மனைவி இதை தொடர்பாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய கணவர் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 8 லட்ச ரூபாய் வரையில் கடன் பெற்றார். இந்த கடனை வசூலிப்பதற்காக வங்கியின் ஊழியர்கள் மிகவும் தரக்குறைவாகவும் கீழ்தரமாகவும் பேசினார்.

அவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் மனவேதனையில் தாங்க முடியாமல் என் கணவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.