நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தை சேர்ந்த பெண்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் ராசிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு முன்பாக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென தரையில் அமர்ந்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்… கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்…!!!!!
Related Posts
“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்”…. கரூர் பெண்ணை கரம்பிடித்த தென்கொரிய வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி…
Read moreபால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…
Read more