மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் மாயன் நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கும் நிலையில் அவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் இவர்களுடைய மகள் பாண்டியம்மாளுக்கு திருமணமான நிலையில் தன் கணவருடன் ராஜம்பாடி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். அதன் பிறகு தங்கராசு ஒரு விபத்தில் காயம் அடைந்த நிலையில் தன்னுடைய மகள் வீட்டில் இருந்தார். இதனால் வீட்டில் காசம்மாள் மட்டும் தனியாக இருந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

அதோடு வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார். வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக உடனடியாக அக்கம்பக்கத்தினர் சிந்து பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்பத்தினர் மொத்தம் 65 பவுன் தங்க நகைகளை திருடப்பட்டிருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து காசம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.