மதுரை மாநகரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்ட நிலையில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள். திமுக ஆட்சி என்றாலே கலக்ஷன் கரப்ஷன் மற்றும் கமிஷன் மட்டும் தான். இவர்கள் வீட்டுக்குள் சாமி கும்பிடுவார்கள் ஆனா வெளியே மாற்றி பேசுவார்கள். இது வேஷம் போடும் ஆட்சி. இந்த ஆட்சி தொடர்ந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு போக முடியாத சூழல் ஏற்படும்.

எனவே தாய்மார்களே நம்மை யார் ஆள வேண்டும் என்பதை எடை போட்டு முடிவு செய்து பாருங்கள். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக வாக்களியுங்கள் என்று கூறினார். மேலும் சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த சம்பவங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது செல்லூர் ராஜு இதே நிலை தொடர்ந்தால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று திமுகவை விமர்சித்துள்ளார்.