மதுரை மாவட்டத்திலுள்ள முள்ளி பள்ளம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன்  கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரின் மனைவி பாண்டியம்மாளுக்கும்(45) கணேசனுக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த உறவினர்கள் இருவரையும் கண்டித்தனர்.

ஆனாலும் இருவரும் தகாத உறவை கைவிடவில்லை? கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டியம்மாள் கணேசனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் பாண்டியம்மாள் கணேசனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.