
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபலமான நடிகை ஹூமைரா அஸ்கர் அலி. இவருக்கு 32 வயது ஆகும் நிலையில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கராச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது வீட்டிலிருந்து அக்கம் பக்கத்தினர் துர்நாற்றம் வீசுவதாக தகவல் கொடுத்ததை எடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு அவரது மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என்பதால் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.