சத்தீஸ்கர் மாநிலத்தில் 19 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் ஒரு சில பாலோவர்ஸ் சிறுமியை காப்பாற்றுவதற்காக அவரது வீட்டிற்கு விரைந்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள் சிறுமி இறந்துவிட்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த சிறுமி சமூக வலைதளங்களில் மூழ்கி விட்டதாக குடும்பத்தினர் போலீசாரிடம் கூறியுள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி அறிய சிறுமியின் மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.