ருமேனியாவின் புக்கரெஸ்டில் அட்ரியானா நெகோ (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இரண்டு பக் நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அட்ரியானாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மர்மமான முறையில் அட்ரியானா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவரது உடலின் பாதி தான் இருந்தது. மறுபாதியை அட்ரியானா வளர்த்த வளர்ப்பு நாய்கள் தின்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அட்ரியானா எப்படி இருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் அவர் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.