
நீலகிரி மாவட்டம் வனப்பகுதிக்கு அருகே பென்காம் எஸ்ட்டேட் ஒன்றுள்ளது. இந்த எஸ்டேட்டில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பென்காம் எஸ்ட்டேடுக்கு தினசரி வனவிலங்குகள் வருகின்றன. மேலும் அந்த வனவிலங்குகள் அங்குள்ள மக்களை தாக்கிக் கொண்டு வரும் செய்தி அதிகமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து 6 மாதங்களாக 3-க்கும் மேற்பட்ட கரடி போன்ற வனவிலங்குகள் பகல் நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதோடு, சமையலறைக்குள் புகுந்து உணவை சாப்பிடுகிறது. அதோடு கடைகளை உடைத்து உணவுப் பொருள்களை எடுத்து செல்கின்றன. இதையடுத்து இரவு நேரங்களிலும் உணவுகளை தேடி பென்காம் எஸ்ட்டேட் பகுதிக்கு அருகே சுற்றித் திரிகின்றன. குறிப்பாக ஒரு வீட்டின் சமயலறையில் நுழைந்து குக்கரை திறந்து உணவை சாப்பிட்டது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. மேலும் இரவும் பகலும் கரடிகள் நடமாட்டம் இருப்பதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் சுற்றி வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் அங்கு கூண்டு வைக்கப்பட்டதோடு, கரடியையும் கண்காணித்து வருகின்றன.