தமிழக மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதாவது வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால் அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றி ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வீட்டு கரண்ட் பில்லை பொறுத்த வரையில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கிறது.

இதனால் வருவாயை பெருக்கும் நோக்கத்தில் இரு மின் இணைப்புகளை ஒரே மின் கணக்காக மாற்றி அதில் 100 யூனிட் மின்சாரத்தை மட்டும் கழித்து மற்ற யூனிட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் இந்த முடிவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.