உத்திரபிரதேச மாநிலத்தில் பிலிபட் பகுதியில் ஒரு விவசாய குடும்பம் வசித்து வருகிறது. இந்த பகுதியில் ஒரு 28 வயசு விவசாயி மற்றும் அவருடைய 25 வயது மனைவி வசித்து வருகிறார்கள். இவர்களுடைய வீட்டிற்குள் கடந்த ஜனவரி 17ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று நுழைந்துள்ளது. கிட்டத்தட்ட வீட்டிற்குள் 5 பேர் நுழைந்த நிலையில் அவர்கள் விவசாயியை கடுமையாக தாக்கினார். இதனை அவருடைய மனைவி தடுக்க சென்றபோது அவரின் ஆடைகளை அவிழ்த்து சித்திரவதைப்படுத்தினர். அதோடு அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த பிறகு தம்பதியினர் இருவரும் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்த நிலையில் அவர்களுடைய புகார் ஏற்க மறுத்த போலீசார் 24 மணி நேரம் அவர்களை போலீஸ் ஸ்டேஷனில் சிறை வைத்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களுடைய உடம்பில் காயங்கள் இருந்த போதிலும் மருத்துவ உதவி கூட வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் கூடுதல் மாஜிஸ்திரேட் தலையிட்ட பிறகுதான் நேற்று முன்தினம் குற்றவாளிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முன் பகை காரணமாக தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. அதோடு புகாரை ஏற்காத போலீசார் மீதும் விசாரணை நடைபெறுகிறது.