கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை குன்னத்தூர் காலணியில் மருதாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டாமுத்தூரை சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஷீபா ராணி என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி நான் உட்பட 26 பேர் தலா 52 ஆயிரம் ரூபாய் வீதம் 13 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பணத்தை ஷீபா ராணியிடம் கொடுத்தோம். ஆனால் அவர் வீடு கட்டி தராமல் எங்களை ஏமாற்றி விட்டார். இதற்கு அவரது கணவர் ராஜசேகர், மகன் இமானுவேல் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் ஷீபா ராணி, ராஜசேகர், இம்மானுவேல் ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.