திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஜான் ஜோதி கார்டன் பகுதியில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்ட அனுமதி கேட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது தொழில்நுட்ப உதவியாளரான நாகலிங்கம்(35) அனுமதி வழங்க 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணமூர்த்தி நாகலிங்கத்திடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகலிங்கத்தை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நாகலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.