
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு உளிமாவு பகுதியில் ஸ்ரீஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணமான நாள் முதலே ஸ்ரீஹரி தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் ஸ்ரீஹரி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அனுஷா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் அவர்கள் அறிவுரை கூறி அனுஷாவை அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து ஸ்ரீ ஹரி தனது மனைவியை கொடுமைப்படுத்தி விவாகரத்து கேட்டு சண்டை போட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு ஸ்ரீஹரி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அனுஷா தனது கணவருக்கு வீடியோ கால் செய்துள்ளார். பின்னர் தன்மீது பெட்ரோலை ஊற்றி வைத்துக் கொண்டார்.
அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் இருந்த அனுஷாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அனுஷா உயிரிழந்தார். முன்னதாக சிகிச்சை பெற்று வந்த அனுஷாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது கணவர் கொடுமைப்படுத்தியதாலும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாலும் தற்கொலை செய்து கொண்டதாக அனுஷா கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து ஸ்ரீஹரியை கைது செய்தனர்.