
தூத்துக்குடி மற்றும் ஓஹா இடையே இயக்கப்படும் விவேக் விரைவு ரயில் பெட்டிகள் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் இருந்து குஜராத் மாநிலம் ஓஹா வரை வாரம் தோறும் விவேக் விரைவு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயிலின் பெட்டிகள் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி முதல் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது.
தில் இரண்டு இரு அடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 6 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், ஆறு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், மூன்று பொதுப் பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.