
டெல்லி உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற வழக்கில் மகனை பார்ப்பதற்காக ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதாவது ஒரு தம்பதி விவாகரத்து பெற்ற நிலையில் அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது மகன் தாயுடன் இருக்கும் நிலையில் குறிப்பிட்ட நாளில் மட்டும் குழந்தையை பார்க்க அந்த தந்தைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் தாய் மகனை தந்தையுடன் பேசவிடாமல் தடுத்துள்ளார். அதாவது அன்றைய தினம் தன் மகனுக்கு அவர் சொல்லிக் கொடுத்து தந்தையை பார்த்து பேச கூடாது என்று தூண்டிவிட்டுள்ளார்.
இதனை அந்த கணவன் வீடியோவாக எடுத்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த ஆதாரத்தை காண்பித்தார். இந்த வீடியோ ஆதாரங்களை வைத்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு ரூபாய் 50000 அபராதம் விதித்தது. இதில் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்தக் கணவருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் நீதி பணத்தை உயர் நீதிமன்றத்தில் செலுத்துமாறு உத்தரவிட்டது. மேலும் குழந்தை சந்திப்பு என்பது அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவையில் அறிவுறுத்தியுள்ளனர்.