2020ஆம் ஆண்டில் நடாஷாவுடன் திருமணம் செய்த ஹர்திக், அண்மையில் விவாகரத்து செய்ய தீர்மானித்தார். இவர்களது மகன் அகஸ்தியா பிறந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளில் ஹர்திக்கான சூழ்நிலைகள் மிகவும் கடுமையாக இருந்தன. தங்களின் விவாகரத்து குறித்து ஹர்திக் பாண்டியா, நானும் நடாஷாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த கடினமான நேரத்தில் தங்களது தனி உரிமையை மதித்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பிரிட்டனைச் சேர்ந்த பாடகி  ஜாஸ்மின் வாலியா என்பவரோடு நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற போது ஜாஸ்மின் துபாய்க்கு வந்திருந்தார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரை காண்பதற்கு இந்தியா வந்துள்ள அவர் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டிகளில் பார்வையாளராக போட்டியை கண்டு ரசித்துள்ளார். இந்த நிலையில் இருவரையும் இணைத்து மீண்டும் சர்ச்சைகள் பரவி வருகிறது.