
தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிலையில் விவசாயிகளின் வசதிக்காக பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல் மற்றும் நோய் கண்காணித்தல் போன்ற பணிகளை செய்ய இயந்திரமயமாக்கல் துணை இயக்க திட்டத்தின் கீழ் ட்ரோன் கருவிகளை மானியத்தில் வழங்குவது குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி விவசாயிகள் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இந்த திட்டத்தின் மூலம் அரசு மானியத்தில் வழங்கி வருகின்றது. இந்த வருடம் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பட்ட விவசாயிகள் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தால் ஆகியவற்றை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரவுன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.