
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மேலாண்மை விவசாயத்துறையின் சார்பாக “மூலத்திலிருந்து வயலுக்கு தண்ணீரை எடுத்து செல்லும் குழாய்கள் அமைக்கும்” திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயத்திற்கு 800 மீட்டர் வரை வயலுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் குழாய்கள் விவசாயிகளுடைய தேவைக்கு ஏற்ப அமைப்பதற்கு நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலமாக பொருத்தப்படும் குழாய்களுக்கு அதனுடைய விலையில் 50 சதவீதம் அல்லது 15,000 நிதி உதவி கொடுக்கப்படுகிறது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். அடையாள சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்றவை இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள். இந்த திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் பக்கத்தில் உள்ள மாவட்ட வேளாண் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதுமான ஆவணங்களோடு விண்ணப்பிக்க வேண்டும்.