
பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு தவணைக்கு 2000 வீதம் வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 17 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 18-வது தவணை தொகை பணம் இன்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று 18-வது தவணைத்தொகை பணம் வங்கிகளில் வரவு வைக்கப்படும் நிலையில் இகேஒய்சி அப்டேட்டை சரி பார்க்காத விவசாயிகளுக்கு பணம் கிடைக்காது. எனவே இந்த செயல்பாட்டை விவசாயிகள் முடிப்பது அவசியம்.
இந்த செயல்பாட்டினை பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம். அதன்படி பிஎம் கிசான் அதிகாரபூர்வ இணையதளத்திற்குள் சென்று பயனாளியின் நிலைப்பக்கத்தை அணுகி பயனாளி நிலை என்பதை கிளிக் செய்து ஆதார் எண் அல்லது கணக்கு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு தரவைப் பெறு என்பதை கிளிக் செய்து பயனாளியின் நிலையை சரிபார்த்து கட்டண நிலையை சரிபார்த்தல் வேண்டும். இதைத்தொடர்ந்து உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்கள் நிலை என்னவென்று காட்டப்படும். மேலும் பிஎம் கிசான் திட்டத்தின் 18-வது தவணைத்தொகை இன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் நிலையில் உடனடியாக விவசாயிகள் இகேஒய்சி அப்டேட்டை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.